தளபதி விஜய்யின் அப்பாவும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து இயக்கியிருக்கும் படம் கேப்மாரி. இது, அவரது இயக்கத்தில் உருவாகும் 70-வது மற்றும் கடைசி படமாகும்.  

இந்தப் படத்தில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார். இது, அவருக்கு 25-வது படமாகும். கேப்மாரி படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா மற்றும் வைபவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன், சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்துக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. நவம்பர் மாத ரிலீசுக்கு ரெடியாகியிருக்கும் கேப்மாரி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருந்தார். 

 டபுள் மீனிங் வசனங்கள், லிப் லாக் மற்றும் படுக்கையறை காட்சிகள் என பார்ப்பவர்களை வாய்பிளக்க வைத்த இந்த டிரைலர், தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. 

மகனின் பெயரை கெடுக்க தந்தை போதும் என எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 
இந்நிலையில், கேப்மாரி படத்தின் டிரைலர் குறித்து நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''S a c-C M ஆகி S e x பற்றியும், Life பற்றியும் கடல் அளவு Deep ஆக அலசி,ஜெய்'க்க தன் 'மன வய'தில்' உள்ள குளிர் சாதன குட்டிகளை வைத்து 'புள்ளைங்கோ' நெஞ்சில் Temperature அதிகப்படுத்துகிறார். 

உ'தட்டில் 'Gap' இல்லாமல் மாறி 'மாரி'இட்டு நிரப்புகிறார் இளமை லேகியத்தை'A'' என்று குறிப்பிட்டுள்ளார். பார்த்திபனின் அந்த மாதிரியான இந்த கமென்டுக்கு, ரசிகர்கள் பலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.