இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு பின் வெளியான திரைப்படம் 'நம்ம வீட்டு பிள்ளை'. இந்த படத்தில், 'மெரினா' படத்திற்கு பின் பாண்டிராஜுடன் கை கோர்த்திருந்தார் நடிகர் சிவா.

அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து, எடுக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குடும்பங்கள் பார்க்க கூடிய படமாக எடுக்கப்பட்டிருந்ததாகவும் ரசிகர்கள் பாராட்டி இருந்தனர்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அனுஇமானுவேல் நடித்தார். காதலியா - தங்கையா என வரும் போது, தனக்கு தங்கை தான் முக்கியம் என கூறும் காட்சிகள் அனைவரையும் ஈர்க்கும் விதமாக இருந்தது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள, காந்த கண்ணழகி பாடலை... இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

அந்த பாடல் இதோ...