இயக்குனர் சுந்தர் பாலு இயக்கத்தில்,  நான்கு நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கன்னித்தீவு' இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.  

சமீப காலமாக வளர்ந்து வரும் நடிகைகள் முதல், வளர்ந்த நடிகைகள் வரை, முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களை விட கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும்,  திகில் மற்றும் திரில்லர் படங்களிலும் தான் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த பாணியில் உருவாகியுள்ளது 'கன்னித்தீவு' திரைப்படம். இந்த படத்தில் நடிகை வரலட்சுமி, ஆஷ்னா சவேரி,  ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா,  ஆகிய 4 நடிகைகள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

 

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.  இந்த போஸ்டரில் நான்கு நடிகைகளும் மரண பயத்தில் தண்ணீரில் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.  இவர்கள் காலின் அருகே முதலை ஒன்று தண்ணீரில் கீழே உள்ளது.  இந்த வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.