திமுகவின் இளைஞரணித் தலைவர் பதவி கிடைத்த ராசியோ என்னவோ உதயநிதி ஸ்டாலின் நடித்த படமான ‘கண்ணே கலைமானே’ சர்வதேச விருது ஒன்றுக்குத் தேர்வாகியுள்ளது.

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம்  'கண்ணே கலைமானே'.  இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடித்திருந்தார். தமன்னா வங்கி அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் வசூலில் எதையும் சாதிக்கவில்லை.

 கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி இரண்டாவது வாரமே வீடு திரும்பிய அப்படத்துக்குசில லோக்கல் விருதுகள் மட்டும் கிடைத்திருந்தன. இந்நிலையில், 'கண்ணே கலைமானே' படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே திரைப்படம் விருது பெறுகிறது. இதுகுறித்து  டுவிட்டரில் செய்தி வெளியிட்ட சீனு ராமசாமி , "தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் 'கண்ணே கலைமானே' திரைப்படம் விருது பெறுகிறது.இச்செய்தியை அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன் " என பதிவிட்டுள்ளார்.