பிரபல கன்னட நடிகர் ராஜேஷ் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கன்னட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பிரபல கன்னட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 89. முனி சவுதப்பா என்ற இயற்பெயர் கொண்ட இவர் கடந்த 1960-ம் ஆண்டுக்கு பின் கன்னட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சினிமாவுக்காக தனது பெயரை ராஜேஷ் என மாற்றிக் கொண்ட இவர் ஏராளமான கன்னடப் படங்களில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். 

நடிகர் ராஜேஷ் கடந்த சில நாட்களாக சிறுநீரக செயலிழப்பு மற்றும் வயது மூப்பு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இதனால், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கஸ்தூரிபா நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் மூலம் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், நடிகர் ராஜேஷ் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கன்னட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், ராஜேஷின் உடல் வித்யாரன்யாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இவர் நடிகர் அர்ஜுனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.