கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன்(37) . எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றிருந்தார். இவருக்கு கடந்த 2016 ம் ஆண்டு திருமணம் முடிந்து உமையாள் என்கிற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு வாலிப ராஜா, சக்கபோடு போடு ராஜா மற்றும் 50/50 ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளார். நடிகர் சந்தானமும் சேதுராமனும் நெருங்கிய நண்பர்கள்.

Actor_Sethuraman

நேற்று இரவு சென்னையில் வீட்டில் இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்குச் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு 8:30 மணியளவில் அவர் மரணமடைந்தார். அவரது உயிர் பிரிந்த செய்தி கேட்டு மனைவி மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.