வெறும் உள்ளாடைகளுடன் நடிகை கங்கனா ரனாவத் நடத்தி முடித்துள்ள போட்டோ சூட் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தமிழில் தாம் தூம் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் கங்கனா ரனாவத். அந்த படத்திலேயே முத்தக்காட்சியில் நடித்ததுடன் ஜெயம் ரவியுடன் காரில் மிக மிக நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை சூடேற்றியிருப்பார். அதன் பிறகு தமிழ் படங்களில் கங்கனா நடிக்கவில்லை. ஆனால் இந்தி திரைப்படங்களில் தற்போது முன்னணி நடிகையாக கங்கனா இருக்கிறார். இவர் நடித்த குயின் திரைப்படம் இந்தியில் பல்வேறு வசூல் சாதனைகளை படைத்தது. அதுமட்டும் இன்றி முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் கங்கனா இருக்கிறார். ஜான்சிராணியாக இவர் நடித்து வரும் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் அந்த படம் எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.   இந்த நிலையில் மென்டல் ஹய் கியா என்கிற படத்திலும் கங்கனா நடித்து வருகிறார். இப்படத்தில் ராஜ்குமார் ராவ் கங்கனாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மென்டல் ஹய் கியா படத்தின் விளம்பரத்திற்காக காஸ்மோபாலிட்டன் எனும் பேசன் இதழுக்கு நடிகை கங்கனா போட்டோ சூட் நடத்திக் கொடுத்துள்ளார். இந்த போட்டோ சூட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு, மேலே ஒரே ஒரு கோர்ட் போட்டுக் கொண்டு கங்கனா கொடுத்துள்ள போஸ் அவரது ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் உள்ளது. ஆனால் கங்கனாவின் இந்த போசுக்கு வழக்கம் போல் கலாச்சார காவலர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கிவிட்டனர். ஜான்சி ராணியாக நடித்துள்ள நிலையில் எப்படி வெறும் உள்ளாடைகளுடன் கங்கனா போஸ் கொடுக்கலாம் என்று கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.