மனைவியை பயன்படுத்தி இளம் பெண்களுடன் சல்லாபம் செய்பவர் என நடிகர் ஹிருதிக்  ரோஷன் மீது நடிகை கங்கனா பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார். ஹிருதிக் ரோஷன் தனது சிறுவயது காதலி சுஹானாவை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அப்போது நடிகை கங்கனாவுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து சுஹானா ஹிருதிக்கிடம் இருந்து விவகாரத்து பெற்று சென்றுவிட்டார். கருத்து வேறுபாடு காரணமாக கங்கனா – ஹிருதிக் ரோஷன் இடையேயும் பிரச்சனை ஏற்பட்டது. 

அவ்வப்போது ஹிருதிக் ரோசன் மீது கங்கனா புகார்களை கூறி வந்தார். தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார் என்றும், தானும் ஹிருதிக் ரோஷனும் காதலித்தோம் என்றெல்லாம் கங்கனா கூறிய புகார்களை ஹிருதிக் மறுத்து வருகிறார். இருவரும் நண்பர்களாக மட்டுமே பழகியதாகவும் ஹிருதிக் ரோஷன் விளக்கம் அளித்து வருகிறார். இந்த நிலையில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் மீ டூ என ட்விட்டரில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

இது குறித்து நடிகை கங்கனா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது தற்போதும் கூட பல நடிகர்கள், நடிகைகளை அடிக்கிறார்கள், தொந்தரவு செய்கிறார்கள். ஆனால் அவர்கள் பெயர்கள் எல்லாம் வெளியாகவில்லை. அந்த நடிகர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கங்கனா தெரிவித்தார். மேலும் நடிகர்கள் தங்கள் மனைவியை கேடயமாக பயன்படுத்திக் கொண்டு இளம் பெண்களை ஆசை நாயகிகளாக வைத்துக் கொள்கிறார்கள்.

 

 மனைவி இருக்கும் போதே இளம் பெண்களை ஆசை நாயகிகளாக்கிக் கொள்ளும் நடிகர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கங்கனா தெரிவித்தார். உடடினயாக தொகுப்பாளர் நடிகர் ஹிருதிக் ரோசனை பற்றியா பேசுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆம் தான் ஹிருதிக் ரோசனை பற்றித்தான் கூறுகிறேன் என்று பதில் அளித்து திடுக்கிட வைத்தார் கங்கனா.

மேலும் மனைவி இருக்கும் போதே இளம் பெண்களை ஆசை நாயகியாக்கும் ஹிருதிக் ரோசனுடன் இணைந்து யாரும் பணியாற்ற கூடாது என்றும் கங்கனா கேட்டுக் கொண்டார். இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டார் வரிசையில் உள்ள நடிகர் ஹிருதிக் ரோசன். அவர் மீது கங்கனா கூறியுள்ள புகார் பாலிவுட் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.