kanchana team give the complaint for oviya

நடிகை ஓவியாவிற்கு பிக் பாஸ் நிகழ்சிக்கு பின் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மேலும் பல்வேறு விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில், ஓவியா நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்க இருந்த காஞ்சனா 3 படத்தில் கமிட் ஆகி இருந்தார். ஆனால் இவர் ஓய்வு இல்லாமல் விளம்பரப்படங்களில் நடித்து வருவதால் படப் பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது.

இதன் காரணமாக காஞ்சனா 3 படக்குழுவினர், நடிகை ஓவியா இந்தப் படத்தில் நடிக்க தங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு தற்போது படப் பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை எனக் கூறி புகார் அளித்துள்ளனர்.

இதற்கு ஓவியா, விளம்பரப் படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்து வருவதால், தன்னால் படப் பிடிப்பில் கலந்துகொள்ள முடியாதது உண்மைதான். அதனால் இந்தப் படத்தை விட்டு தான் விலகிக் கொள்வதாக தெரிவித்து, வாங்கிய அட்வான்ஸ்சுடன் வட்டி போட்டு, பெற்ற பணத்தை கொடுத்துவிட்டாராம்.

ஆனால் படக்குழுவினர், பணத்தை வாங்க மறுத்து ஓவியாதான் நடித்துத் தர வேண்டும் எனக் கூறியுள்ளனராம். இதனால் இந்தப் படத்தில் ஓவியா நடிப்பாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.