Asianet News TamilAsianet News Tamil

’இந்த லாரன்ஸ் கிட்ட இருந்து பேய்களைக் காப்பாத்துங்க பாஸ்’...காஞ்சனா 3’கண்டு கதறும் ரசிகர்கள்...

‘பேய்ப்படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் டைரக்டரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் பேய்களைப் படாதபாடு படுத்துகிறார். அவர் கிட்ட இருந்து பேய்களைக் காப்பாத்தி பத்திரமா, பேய்களோட பேரண்ட்ஸ் கிட்ட  அனுப்பி வைங்க’ என்று காஞ்சனா 3’ படம் பார்க்கும் ரசிகர்கள் கதறி வருவதாக அப்படத்தை வெளியிட்டிருக்கும் தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

kanchana 3 movie opinions
Author
Chennai, First Published Apr 20, 2019, 3:51 PM IST


‘பேய்ப்படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் டைரக்டரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் பேய்களைப் படாதபாடு படுத்துகிறார். அவர் கிட்ட இருந்து பேய்களைக் காப்பாத்தி பத்திரமா, பேய்களோட பேரண்ட்ஸ் கிட்ட  அனுப்பி வைங்க’ என்று காஞ்சனா 3’ படம் பார்க்கும் ரசிகர்கள் கதறி வருவதாக அப்படத்தை வெளியிட்டிருக்கும் தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.kanchana 3 movie opinions

லாரன்ஸ்,ஓவியா, வேதிகா,கோவை சரளா நடிப்பில் நேற்று வெளியான ‘காஞ்சனா 3’ படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் இருந்தாலும் அந்த வசூல் வேட்டை ஞாயிற்றுக் கிழமையோடு முடிந்து விடும் என்றும், இதன் முந்தைய மூன்று படங்களோடு ஒப்பிடும்போது இது மிகப்பெரிய தோல்விப்படமாக லாரன்ஸுக்கு அமையும் என்றும் விநியோகஸ்தர்கள் அஞ்சுகின்றனர்.kanchana 3 movie opinions

...முந்தைய படத்தின் நடிகர்களை ரிப்பீட் பண்ணினாப் பரவாயில்லை. முந்தின படத்துப் பேய்களையும் ரிப்பீட் பண்ணுனாக் கூடப் பரவாயில்லை. முந்துன படத்து சீன்கள் அத்தனையையும் அப்படியே ரிப்பீட் பண்ணுறீங்களே பாஸ். உங்களைப் பேய்ப் படம் எடுக்க வேண்டாம்னு சொல்லலை. பழைய பேய்களுக்கு எண்ட் கார்டு போட்டுட்டு, புதுப் பேய்களை கதையில புழங்க விடுங்க பாஸ்... என்று நெட்டிசன்கள் நெளிந்துகொண்டு வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios