Asianet News TamilAsianet News Tamil

Vikram Movie: உலக நாயகன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்! லோகேஷ் கனகராஜ் பதிவால் குஷியோ குஷி!

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, 'விக்ரம்' படத்தில் இருந்து முதல் பார்வை வெளியிடப்படும் என அதிரடியான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார் இந்த படத்தின் இயக்குனரானலோகேஷ் கனகராஜ். இந்த தகவல் கமல்ஹாசன் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 

kamalhassan new vikram poster new message gose viral in internet
Author
Chennai, First Published Nov 5, 2021, 7:18 PM IST

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, 'விக்ரம்' படத்தில் இருந்து முதல் பார்வை வெளியிடப்படும் என அதிரடியான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார் இந்த படத்தின் இயக்குனரான, லோகேஷ் கனகராஜ். இந்த தகவல் கமல்ஹாசன் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

நடிகர் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கிவருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள, இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதே போல், பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன், சின்னத்திரை நடிகை மைனா, மற்றும் மகேஸ்வரி என மூன்று நடிகைகள் ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: Sneha Diwali Celebration: வாவ் சினேகாவின் மகளா இது? அப்படியே அழகில் அம்மாவை உரிச்சு வச்சிருக்காங்க!

 

kamalhassan new vikram poster new message gose viral in internet

இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வருகிறது. அனிரூத் இசையமைத்து வரும் இந்த படத்தின், 2 ஆம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வருகிறது. இதற்காக, சென்னையில் படப்பிடிப்பு நடத்த விக்ரம் படக்குழு அனுமதி கோரியது. ஆனால் அதற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதற்கான காரணத்தையும் விரிவான பதில் கடிதத்தில் கூறி இருந்தது. அதாவது 'விக்ரம்' படக்குழுவினர் சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை அருங்காட்சியகத்தில் முக்கியமான சில காட்சிகளை படம்பிடிக்க அனுமதி தருமாறு கேட்டு இருந்தனர். படத்துக்காக அரங்குகள் அமைக்க வேண்டும், ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றும் கோரி இருந்தனர். ஆனால் இதற்கு சென்னை காவல்துறையினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்: வயசுக்கு ஏற்ற உடையில்... 'குட்டி' நயன் அனிகா!! தீபாவளி ஸ்பெஷல் போட்டோஸைப் பார்த்து குதூகலமான ரசிகர்கள்!

 

kamalhassan new vikram poster new message gose viral in internet

இது குறித்து படப்பிடிப்பு குழுவுக்கு சென்னை மாநகர காவல்துறை சார்பில் ஒரு கடிதமும் அனுப்பி இருந்தது. அந்த கடிதத்தில் கொரோனா விதிமுறைகள் இன்னமும் நடைமுறையில் இருக்கின்றன, ஆகவே அரசுக்கு சொந்தமான இடங்களில் எவ்வித படப்பிடிப்பும் நடத்த அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. படப்பிடிப்புக்கான அனுமதி மறுக்கப்பட்டு உள்ள விவரம் அறிந்த தயாரிப்பு மற்றும் படக்குழு அதிர்ந்து போயிருக்கிறது. எனவே வேறு இடத்தில் படப்பிடிப்பை நடத்த படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: Annaatthe Movie: கேஸ் போட்டது எல்லாம் வீணா போச்சு! ஒரே நாளில் உச்ச கட்ட அதிர்ச்சியில் 'அண்ணாத்த' படக்குழு!

 

kamalhassan new vikram poster new message gose viral in internet

இந்நிலையில், நவம்பர் 7 ஆம் தேதி உலக நாயகன் கமல் ஹாசன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தகவலை சற்று முன்னர் அறிவித்துள்ளார் 'விக்ரம்' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் கையில் துப்பாக்கியை கையில் ஏந்தியபடி உள்ள போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படத்தின் முதல் பார்வை நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக நாயகன் ரசிகர்கள் செம்ம குஷியாகியுள்ளனர்.

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios