kamalhassan meet shruthihassan lover
உலக நாயகன் கமல்ஹாசனில் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் லண்டன் நாடக நடிகர் மைக்கேல் கார்செலை காதலிப்பதாக கூறப்படுகிறது.

இதனை உறுதி படுத்தும் விதமாக இந்த வருட காதலர் தினத்தை அவருடன் தான் கொண்டாடினார் ஸ்ருதி, ஆனால் இதை பற்றி அவரிடம் மீடியாக்கள் கேட்டாள் கோபத்தையே பதிலாக கொடுத்தார்.

ஆனால் ஸ்ருதிஹாசன் மைக்கேல் கார்செலை மேல் இருக்கும் காதலை மறுக்கவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை, இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற கலாச்சார வரவேற்பு விழாவிற்கு சென்றிருத்த கமல், அப்படியே லண்டன் சென்று மைக்கேல் கார்செலை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு ஸ்ருதியின் திருமணம் குறித்து பேசுவதற்காக நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது கமல் ஸ்ருதியின் காதலரை சந்தித்த புகைப்படம் வெளியாகி வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.
