kamalhassan mahabaradham issue

நடிகர் கமலஹாசன் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு தற்போது நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்கள் குறித்தும், பெண்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் அநியாயங்கள் குறித்தும் பேசினார்.

அப்போது மஹாபாரதத்தை உதாரணமாக சொல்லி, பெண்களுக்கு தற்போது நடந்து வரும் கொடுமைகளை எடுத்து கூறினார்.

இது தொடர்பாக ஏற்கனவே 3 பேர் இந்துக்களின் கலாச்சாரத்தை கமல் அவமதித்ததாக கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்போது இந்த வழக்குகள் குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் நிலையில்.

மேலும் ஒரு புது வழக்கு கமல் மீது தொடரப்படடுள்ளது, பெங்களூரை சேர்ந்த பிரதானந்தா என்கிற சாமியார் பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.

அதில், நடிகர் கமல்ஹாசன் இந்து மதத்தை தாக்கி பேசும் வகையில் மகாபாரதத்தை வைத்து விளக்கம் கூறியுள்ளார். இது தாங்கள் மதிக்கும் இதிகாசத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது, ஆகவே இந்த புகாரை ஏற்று அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் விரைவில் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.