பிக்பாஸ் வீட்டில் இன்று கமல் வருவதால் மற்ற நாட்களை விட, இன்றைய நிகழ்ச்சியின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கும்.  அதற்கு ஏற்றப்போல் டி.ஆர்.பியும் எகிறும். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டின் தலைமை பற்றி விமர்சித்தார் கமல். அதைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், வனிதா கமலுடன் பேசும் காட்சிகள் காட்டப்படுகிறது.

"எடுத்ததுமே உண்மையில் அபிராமியின் கேரக்டர் இதுதானா? ஒரு அட்டென்ஷன்காகவும், இந்த வாரம் அவங்க மீது கவனம் இருக்கவேண்டாம் என்பதற்காக இப்படி செய்கிறாரா? என கமலை பார்த்து தன்னுடைய குற்றத்தை முன்வைக்கிறார்.

இதற்கு கமல் வேறு ஒருவருக்கு அட்டென்ஷன் போய்விடும் என்கிற எண்ணம் உங்களுடைய வார்த்தைகளிலிருந்து வெளிப்படுவதாகவும், ஒரு குரல் மட்டுமே ஓங்கி ஒலிக்க கூடாது. தான் பேசும் அளவிற்கு கேட்கவும் வேண்டும் என கமல் வனிதாவுக்கு பதிலடி கொடுக்கிறார். அதேபோல் ஒரு புறம் அபிராமி கண்ணீர் விட்டு அழும் காட்சியும் காட்டப்படுகிறது.  எனவே இன்று பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்க உள்ளது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றே கூறலாம்.