பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில் ஏற்கனவே, நடிகை வனிதா முதல் தலைவராகவும், இரண்டாவது தலைவராக மோகன் வைத்தியாவும் இருந்த நிலையில், தர்ஷன் மற்றும் சாண்டி இருவரும் விட்டு கொடுத்ததால் மூன்றாவது தலைவராக மாறினார் அபிராமி.

இவர் தலைமை பொறுப்பை ஏற்று, ஒரு வார காலம் முடிய போகும் நிலையில், ஒரு தலைவியாக இருந்து என்ன செய்தார் என பார்ப்பவர்களுக்கு இன்று வரை தெரியவில்லை.

எப்போதும் போல ஒரு போட்டியாளர்களில் ஒருவராக, இவரும் உள்ளதால்... கொடுத்த தலைமை பொறுப்பை இவர் சரிவர கையாளவில்லை என்பதே பார்க்கும் மக்களின் கருத்தாக உள்ளது. 

இந்நிலையில் இன்று உலக நாயகன் கமல், மக்களோடும், போட்டியாளர்களோடும் உரையாடும் நாள். எனவே இத்தனை நாட்கள் இந்த நிகழ்ச்சிக்கு இருந்த எதிர்பார்ப்பை விட இன்றைய தினம் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், தலைமை பொறுப்பில் உள்ள அபிராமியை டார்கெட் செய்து பேசுகிறார் கமல்.

"தலைமை தன்னிலை உணர வேண்டும். தன்னிச்சையாக செயல்பட வேண்டும். தைரியமாக செயல்பட வேண்டும், அப்படி இல்லன்னா என்ன நடக்கின்றது, இத்தனை நாளா பாத்துட்டு தானே இருந்தோம். இப்போது நாமும் இருக்கோம் என்பதை நினைவுபடுத்தும் நேரம் நெருங்கி விட்டது. என பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. " இவர் பேசும் வார்த்தைகள் அனைத்தும் அபிராமியை சுட்டி காட்டுவது போல் உள்ளது எனவே முதல் ஆளாக அபிராமியை இன்று கமல் வார்த்தைகளால் வெளுத்து வாங்குவார் என்பது தெரிகிறது.