kamalhassan and rajinikanth join nadigarsangam

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் முதல் செங்கல்லை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினர்.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டினர்.

விழாவில் கலந்து கொண்ட உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கைகோர்த்து நடிகர்சங்கத்திற்கான அடிக்கல் நாட்டினார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இது நடிகர்களின் கோட்டையாக அமையும் என தெரிவித்துள்ளார். பல நாட்கள் கழித்து நடிகர் கமல்ஹாசனும் ரஜினியும் இணைத்து ஒரு விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.