kamalhaasan today show promo twisting words
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு அகம் டிவி வழியே போட்டியாளர்கள் அனைவருடனும் பேசுவார். கடந்த 5 நாட்களாக பிக்பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனைகள், சர்ச்சைகள் குறித்தும் எந்த பாரபச்சமும் இன்றி பொது மக்கள் தரப்பில் இருந்து கேள்வி எழுப்புவார்.
மேலும் இந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு பிரபலம் வெளியேற்ற படுவார் என்பதும் அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், நடிகர் கமல்ஹாசன்... 'வானத்து வின்மீன்னவருக்கு வன் தூண்டிலிட்ட வகையர் போல்... போனதை எண்ணி புலம்புகின்றனை" என கூறி இதற்கான அர்த்தத்தையும் கூறியுள்ளார்.
இழந்ததையே நினைத்து அழுதுக் கொண்டு இருந்தோம் என்றால், இருப்பதை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போய்விடும்.
இருப்பதை தக்க வைத்துக் கொள்ள போகிறார்களா...? இல்ல தவற விட போகிறார்களா...? என ஒரு புதிர் போட்டுள்ளார்.
இன்று என்ன நடக்கும்...? பொறுத்திருந்து பார்ப்போம்.
