Kamal wishes Ilaiyaraaja : இளையராஜாவின் புத்தாண்டு வாழ்த்து செய்தியை பார்த்த நடிகர் கமல் மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year. என்று ட்வீட் செய்துள்ளார்.

இளையராஜாவின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். காதல், சோகம், வேதனை, துக்கம் போன்ற பலரது கவலைகளை மறக்க வைப்பது ராஜாவின் இசை தான். அதே போல், பலரது இரவு நேர தாலாட்டும் ராஜாவின் இசை என்றே கூறலாம். 

இவரது இசைக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் ராஜ்ஜியம் நடத்தி வரும் இளையராஜா, தற்போது தமிழில் மாயோன் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

78 வயதிலும் ஓயாது உழைத்து வரும் இளையராஜாவின் உடல்நிலை குறித்து நேற்றிலிருந்தே பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளானது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, டுவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் இசையமைத்த இளமை இதோ.. இதோ என்கிற பாடலை பாடியபடி அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு இறுதியில் இது எப்படி இருக்கு என ரஜினியின் பஞ்ச் டயலாக்கை பேசி, தான் நலமாக இருப்பதை சூசகமாக சொல்லிக் காட்டி உள்ளார்.

இளையராஜாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு டுவிட்டர் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Scroll to load tweet…

இந்த வீடியோவை பார்த்த கமல் ; இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன்.இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார்.அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year. என்று ட்வீட் செய்துள்ளார்.