நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவார் என்று இயக்குனர் சீனு ராமசாமி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு நடிகர் கமல் தமிழக அரசை கடுமையாக சாடி வருகிறார். தமிழக அமைச்சர்கள் பலரும் நடிகர் கமல் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

ஆனால், நடிகர் கமலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், திரையுலக பிரபலங்கள், அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுகிறது.

இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ‘’சிவாஜி சார் இடத்தில் சினிமாவில் இன்று இருப்பவர் கமல்ஹாசன். அவரை ஒருமையில் பேசுவது வருத்தமளிக்கிறது. அவர் அரசியலுக்கு வருவார். இது என் கணிப்பு’’ என்று தெரிவித்துள்ளார்.

இப்படி தமிழக அரசை விமர்சிக்கும் கமலுக்கு ஒருபக்கம் ஆதரவு பெருகிவருகிறது. மறுபக்கம் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோளும் வைக்கப்படுகிறது.