தற்போதைய தமிழக அரசியலில் எதிர்பாராத பல மாற்றங்கள் நாள் தோறும் அரங்கேறி வருகிறது.
ஆளுங்கட்சியான அதிமுக இருபிரிவாக பிரிந்து, முதல்வர் பதவிற்கு போட்டியிடும் சூழ்நிலையும் உருவாகி தமிழகத்தின் அரசியலில் அடுத்த நிலை என்ன...??? என்று பலரையும் எதிர்பார்க்க வைத்த நிலையில்.
ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா பொதுச்செயலாளராக பதவி ஏற்று பின் முதலமைச்சர் பதவிக்கு வர நினைத்தார் , ஆனால் அவருக்கு எதிராக பலர் குரல் கொடுத்து ஜெயலலிதாவால் முதல்வர் பதவிக்கு கை காட்டப்பட்ட பன்னீர் செல்வம்தான் வர வேண்டும் என சிலர் கூறினார் .
இந்நிலையில் இன்று அவர்மேல் இருந்த சொத்து குவிப்பு வழக்குக்கு அவருக்கு எதிர்ப்பாக தீர்ப்பு வந்துள்ளது.
இதை தொடர்ந்து நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பாடல் வரிகள் மூலம் சசிகலாவிற்கு எதிராக தன்னுடைய கருத்தை கூறியுள்ளார். அவை இதே....
பழைய பாட்டுத்தான் இருந்தாலும்...
தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்..
எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்..
