கமல் ரசிகர்களுக்கு இது கண்டிப்பாக துக்கச்செய்திதான் என்றாலும் கூடவே இன்னொரு ‘ஸ்வீட் எடு கொண்டாடு’ செய்தியும் இருப்பதால் அதுக்கு இது சரியாப்போச்சு என்று சமாதானப்படுத்திக்கொள்ளவேண்டியதுதான். யெஸ் ‘இந்தியன் 2’ படத்திலிருந்து சர்வ நிச்சயமாக வெளியேறவிருக்கும் கமல் அடுத்து ஒரு சில தினங்களிலேயே ‘தேவர் மகன் 2’ படத்தை முழு வீச்சில் துவங்குகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்கி சுமார் ஒரு வாரமே படப்பிடிப்பு நடந்த ‘இந்தியன் 2’ படம் பல்வேறு காரணங்களால் கமலுக்கு சரிப்பட்டு வரவில்லை. இடையில் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் முட்டல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கவே சில தினங்களுக்கு முன்பு ஷங்கரை அழைத்து தனது முடிவை ஓப்பனாகவே சொல்லிவிட்டாராம். அதை ஒட்டியே ஷங்கர் அடுத்த சப்ஜெக்டுக்கான ஹீரோக்களை வலை வீசித் தேடிவருகிறார்.

இந்நிலையில் இன்னும் ஒரு சில தினங்களில் தனது அரசியல் பணியிலிருந்து சற்று ஓய்வெடுக்கவேண்டி வரும் என்பதை உணர்ந்துகொண்ட கமல் தனது இறுதிப்படமாக ’இந்தியன் 2’ இருப்பதை விட ‘தேவர் மகன் 2’ இருப்பது தனது எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு தோதாக இருக்கும் என்று நினைக்கிறாராம். இப்படத்தின் பிள்ளையார் சுழி வேலையாக தனது குடும்பத்தின் மூத்த அண்ணன் இளையராஜாவை ஓரிரு முறை சந்தித்து கதை என்ன போக்கில் போகிறது எந்த இடத்தில் பாடல்கள் வேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடியிருக்கிறாராம் கமல்.