பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில சமயம் நாம் எதிர்ப்பார்ப்பது மட்டும் அல்ல எதிர்ப்பார்க்காத சில விஷயங்களும் அரங்கேறி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினாலும், சாமர்த்தியமாக பதில் சொல்லி சமாளித்து விடுகிறார் கமல். இதனால் சில ரசிகர்கள் கமல் பாரபட்சம் காட்டுவதாக கூட கூறுகிறார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் முழுக்க, போட்டியாளர்கள் அனைவருக்கும் மிகவும் வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்களிடம் இருந்து போன் வரும். இந்த போனில், மற்ற போட்டியாளரை கன்வெண்ஸ் செய்து ஒரு செயலை செய்ய வைக்க வேண்டும். இப்படி செய்தால் அந்த போட்டியாளர் அடுத்த வார எலிமினேஷனில் இருந்து தப்பிக்கலாம்.

இதன்படி, விஜயலட்சுமியை காப்பாற்ற ரித்விகா டாட்டூ போட்டுக்கொண்டார். ஜனனிக்காக பாலாஜி மொட்டை அடித்து கொண்டார். ஐஸ்வர்யா சென்ராயனுக்காக முடியை வெட்டிக்கொண்டார்... என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் இவர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர்களிடம் உண்மையை கூறி கன்வெண்ஸ் செய்தனர்.

ஐஸ்வர்யா மட்டும் சென்ராயனை ஏமாற்றி அவருடைய முடியை கலர் செய்தார். இதனை தன்னுடைய ஸ்டேடர்ஜி என்றும் கூறிக்கொண்டார். இது தெரியவந்ததும் ஐஸ்வர்யா மீது கோபம் கொள்ளாமல் செண்ரயான் உனக்காக தான் நான் இதனை செய்ததாக பாச மழையை பொழிந்தார். இது பார்க்கும் ரசிகர்களையே கடுப்பாக்கியது.

இந்த கேள்வி  குறித்து வெளியான ப்ரோமோவில், கமல்ஹாசன் இது குறித்து பேசுகிறார் அப்போது ஐஸ்வர்யா பற்றி பேசாமல் இருக்க முடியாது என கூறுகிறார். நீங்கள் பொய் சொல்லிவிட்டு அதை எப்படி ஸ்டேட்டஜி என மாற்றினீர்கள் என ஐஸ்வர்யாவிடம்  கேள்வி எழுப்புகிறார் கமல். பின் இது குறித்து சென்றிராயன் எதோ பேச அவருக்கு செம பல்பு கொடுக்கிறார்கள் ரசிகர்கள்.

இதைத்தொடர்ந்து பேசும் கமல் மிகவும் கோபமாக தன்னை கேட்டால், ஐஸ்வர்யா செய்ததற்கு இது தான் என கூறி ரெட் கார்டை காட்டுகிறார். பின் என்னை யார் கேட்கிறார்கள் உங்களை தானே கேட்கிறார்கள் என குழப்பி விடுகிறார்.

இந்நிலையில், இந்த ப்ரோமோவில் ஐஸ்வர்யாவுக்கு ரெட் கார்டு காட்டி விட்டு சென்றிராயனை எலிமினேட் செய்துள்ளது எந்த விதத்தில் நியாயம் என தற்போது ரசிகர்கள் பலர் தங்களுடைய கேள்வியை எழுப்பி வருகிறார்கள். இதற்கு கமல் என்ன பதில் சொல்ல போகிறார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.