Kamal said Im doing Bigboss show for money did not perform public services

பணத்தேவைக்காகத்தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துகிறேன். பொதுச்சேவை செய்ய பிக்பாஸ் நடத்தவில்லை என நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்திரி ரகுராமன் சர்ச்சை பேச்சு குறித்து நடிகரும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்நிலையில் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிக்பாஸ் சர்ச்சை பேச்சு குறித்து எழுந்துள்ள புகாருக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. 

இந்த நிகழ்ச்சி ஏற்கனவே இந்தியில் ஒளிபரப்பானது தான், அதையேதான் இப்போது தமிழில் நான் தொகுத்து வழங்குகிறேன். என்னை நம்பும் மக்களுக்கு நல்ல விருந்தளிக்க கடமைப்பட்டுள்ளேன். பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு கூட்டு குடும்பம் போன்றது இதை யாரும் தவறாக சித்தரிக்கக்கூடாது. சினிமாவிலேயே சென்சார் இருக்கக் கூடாது என நினைப்பவன் நான். 

பணத்தேவைக்காகத்தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துகிறேன். பொதுச்சேவை செய்ய பிக்பாஸ் நடத்தவில்லை. சிஸ்டம் சரியில்லை என்று முதலில் சொன்னவன் நான் அதையே தான் இப்போது ரஜினி கூறியிருக்கிறார். அவர் கூறிய கருத்தில் தவறும் இல்லை. அந்த கருத்தை நான் எதிர்க்கவும் இல்லை. அரசியலில் நியாயமாக இல்லாதவர்களை விமர்சிப்பேன். ரஜினிகாந்த் அரசியலில் நியாயமாக செயல்படாவிட்டால் அவரையும் விமர்சிப்பேன். இவ்வாறு கமல் கூறினார்.