Asianet News TamilAsianet News Tamil

டிடிவியின் வழியில் வேலூர் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கும் கமலின் மக்கள் நீதி மய்யம்...

இன்னும் இரு வாரங்களில் நடைபெறவிருக்கும் வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடப்போவதில்லை என்று சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

kamal's mnm party to boucott velur bye election
Author
Chennai, First Published Jul 18, 2019, 2:56 PM IST

இன்னும் இரு வாரங்களில் நடைபெறவிருக்கும் வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடப்போவதில்லை என்று சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.kamal's mnm party to boucott velur bye election

வேலூர் தொகுதியில் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் ஆகியோரே மீண்டும் போட்டியிடுகிறார்கள். நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை அறிவித்தது. மீண்டும் சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட விர்ம்பவில்லை என்று கூறி டிடிவியின் அமமுக வேலூரில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.

 இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி மட்டும் வேட்பாளர் அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தது. புதிதாக கட்சியின் ஆலோசகராக இணைந்த பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி கமல்ஹாசன் இந்த தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக தகவல் வந்தது.இன்று வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள். தேர்தலை புறக்கணிப்பது குறித்து இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிடுகிறார்.kamal's mnm party to boucott velur bye election

அந்த அறிக்கை குறித்து த்ரிவித்த  கட்சியின் தலைமை நிர்வாகிகள்,’3 மாதங்களுக்கு முன்பு சில காரணங்களால் வேலூர் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அந்த தேர்தல் நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் மீண்டும் அதே தொகுதியில் தேர்தல் நடத்தப்படுவதால் இந்த தேர்தலும் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம்.அது மட்டும் அல்லாமல் எங்களது இலக்கான பொது தேர்தலை நோக்கி பயணிக்க சில திட்டமிடல்களில் தீவிரமாக உள்ளோம். எனவே இந்த தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு எடுத்துள்ளோம்’என்று தெரிவிக்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios