Asianet News TamilAsianet News Tamil

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார் கமல் ! அடுத்து தொகுத்து வழங்கப் போறது யார் தெரியுமா ?

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்தவுடன் அடுத்த சீசனை கமல் தொகுத்து வழங்கப்  போவதில்லை என்றும் அவர் இதிலிருந்து விலகப் போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியை நடிகர் சிம்பு வழங்க உள்ளதாகவும் தெரிகிறது.

kamal out from big boss
Author
Chennai, First Published Aug 29, 2019, 7:30 PM IST

விஜய்  தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   முதல் இரண்டு சீசன்களைவிட மூன்றாவது சீசன்  அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது.

kamal out from big boss

பிக் பாஸ் சீசன் 3  மொத்தம் 16 போட்டியாளர்களைக் கொண்டு தொடங்கப்பட்டு தற்போது 8 பேருடன் 70 நாட்களை நெருங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்த பிக் பாஸ் சீசனில் இருந்து கமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. மேலும் அடுத்த சீசனை சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கமல் தொகுத்து வழங்கும் அளவுக்கு சிம்புக்கு பக்குவம் இருக்காது என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறிவருகின்றனர். 

kamal out from big boss

கடந்த இரண்டு சீசனை போல் இந்த சீசனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் வருவாரா அல்லது அரசியலில் கவனம் செலுத்துவரா என்று கேள்வி எழுந்தது. அதோடு நிகழ்ச்சியை நடிகர் சூர்யா அல்லது மாதவன் தொகுத்து வழங்குவர் என்று பரவியது. 

ஆனால் அனைத்து வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல் கமலே மூன்றாவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி கமல் தொகுத்து வழங்குவது அந்த நிகழ்ச்சிக்கு ஒரு பலமாக சொல்லப்பட்டது. 

அதோடு நிறைய ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் அடுத்த சீசன் ஆரம்பிக்கும் போது சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் நடிகர் கமல் தொகுத்து வழங்குவது கேள்விக்குறியாகி உள்ளது என்றும் கூறிவருகின்றனர். 

kamal out from big boss

அதனால் அடுத்த பிக் பாஸ் சீசனில் நடிகர் சிம்புவை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. பிக் பாஸ் மூன்றாவது சீசனே முடியாத நிலையில் அடுத்த சீசனில் சிம்பு தான் தொகுத்து வழங்குவார் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் வதந்தி பரவி விடுவதாக கூறுகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios