Asianet News TamilAsianet News Tamil

’நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் தலையீடு இருக்கிறதா?’...கமல் என்ன சொல்கிறார்?...

நடிகர் சங்கத்தில் ரஜினி வாக்களிக்கமுடியாமல் போனதற்குக் காரணம் தபால் துறையினர்தான். இனி எதிர்காலத்தில் ஒருபோதும் இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்’ என்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாஸன்.
 

kamal interview regarding nadigar sangam election
Author
Chennai, First Published Jun 23, 2019, 4:30 PM IST

நடிகர் சங்கத்தில் ரஜினி வாக்களிக்கமுடியாமல் போனதற்குக் காரணம் தபால் துறையினர்தான். இனி எதிர்காலத்தில் ஒருபோதும் இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்’ என்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாஸன்.kamal interview regarding nadigar sangam election

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் வாக்குப்பதிவு முடிய இன்னும் சுமார் அரை மணிநேரமே உள்ள நிலையில் சுமார் 80 சதவிகித வாக்குப்பதிவை எட்டியிருப்பதாகத் தெரிகிறது. நடிகர் விஜய்,விக்ரம்,சூர்யா, ஆர்யா,பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி நடிகர்கள் வாக்களித்திருக்கும் நிலையில் இதுவரை வாக்குச்சாவடியை எட்டிப்பார்க்காத இரண்டு பிரபலங்கள் நடிகர்கல் வடிவேலுவும் அஜீத்தும் மட்டுமே.

இந்நிலையில் நண்பகலில்  நடிகர் கமல் ஹாசன் தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘நடிகர் சங்க தேர்தல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவு செய்தது சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம். ரஜினிக்கு போஸ்டல் ஓட்டு இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது. அடுத்த முறை இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரஜினியின் ஓட்டு மிக முக்கியமானது. அது இல்லாதது வருத்தமளிக்கிறது. வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகள். kamal interview regarding nadigar sangam election

பின்னர் நடிகர் சங்கத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சியின் தலையீடும் இருப்பதுபோல் தெரிகிறதே என்று நிருபர்கள் கேட்டபோது,’என்னைப்பொறுத்தவரை அரசியல் தலையீடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருப்பதும் சரியானதல்ல’ என்று பதிலளித்தார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios