kamal hassan press meet about big boss

தேசிய கீதமான ஐன கன மன பெங்காலி பாட்டை முதலில் நாம் சரியாகப் பாடுவதில்லை. அதுபோலத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது என்று தெரிவித்துள்ள கமலஹாசன் இது தமிழ்தாய் வாழ்த்தை இழிவு படுத்துவதில்லை என்றும் கூறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி சமூக சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும், அதை நடத்தும் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது தனக்கு அனைத்து ரசிகர்களும் தேவை என்று கூறினார்.

கிரிக்கெட் எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் தேவை என்று தெரிவித்தார்.

தான் எதைச் செய்தாலும் விருப்பமுடன் செயல்படுவதாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

தசாவதாரம் வெளியான போது தன்னை கொண்டாடினார்கள், தற்போது எதிர்க்கிறார்கள் எனக்கூறிய கமல், எந்த அரசாக இருந்தாலும் தான் தயங்காமல் எதிர்த்துப் பேசுவேன் என்றும் தெரிவித்தார்.

அரசியல் குறித்து பேச தனக்கு விருப்பமில்லை என்றும் 37 ஆண்டுகளாக நற்பணி மன்றம் மூலமாக பல நன்மைகளைச் செய்துள்ளதாகவும் கமல் கூறினார்.

ஐன கன மன பெங்காலி பாட்டு அதை முதலில் நாம் சரியாகப் பாடுவதில்லை. அதுபோலத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. ஏனென்றால் அது அவர்களுக்கு முழுமையாகத் தெரியாது. எனவே அதைக் கற்றுக்கொடுத்தேன் அதில் தவறில்லை என்றும் கமலஹாசன் கூறினார்.