இளைய தளபதி விஜய்யின் பைரவா படத்தின் இறுதிகட்ட பணிகளை முடித்து சென்சாருக்கு அனுப்பும் முனைப்பில் இருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் பரதன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் பைரவா ட்ரைலர் இன்று இரவு புத்தாண்டு ஸ்பெஷல்லாக வெளியிடவுள்ளதாகவும், நேரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரதன் ட்விட்டர் மூலம் தெரிவித்தார். இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் இதை சந்தோஷமாக ஷேர் செய்து வைரல் ஆக்கினர்.

தற்போது இந்த தகவலை கேள்விபட்ட இயக்குனர் பரதன் அது நான் அல்ல. என் பெயரை வைத்து யாரோ ஒருவர் போலி கணக்கு உருவாக்கி இப்படி செய்திகள் வெளியிட்டு வருகிறார்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இதே போலவே உலக நாயகன் பெயரில் போலி கணக்கு தயாரித்து இப்படி ஒரு சில தகவல்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.