"அண்ணாமலை", "முள்ளும் மலரும்" படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கதாபாத்திரத்தை தான், கமல் ஹாசனால் நெருங்க முடியாது என குறிப்பிட்டிருந்தார் நவீன். அதனைப் பார்த்த தீவிர கமல் ரசிகர்கள் நவீன் மீது கடும் கோபத்தில் உள்ளனர். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அவருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அரசியல் ரீதியாக ரஜினியுடன் கருத்துவேறுபாடு உள்ளவர்கள் கூட பிறந்தநாளை முன்னிட்டு தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டனர். அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்து கூறுவதற்காக இயக்குநர் நவீன் போட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மூடர் கூடம், அக்னிச் சிறகுகள் படத்தின் இயக்குநர் நவீன் உலக நாயகன் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்று சொல்லிக்கொள்கிறார், ஆனால் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வாழ்த்துவதற்காக நேற்று டுவிட்டரில் போட்ட பதிவு அதற்கு அப்படியே நேர்மறையாக அமைந்துள்ளது. 

சூப்பர் ஸ்டாரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த நவீன், ரஜினி ஒரு ஆகச்சிறந்த நடிகர் என்பதை என் போன்ற ஒரு தீவிர கமல் ரசிகன் சொல்லும்போதுதான் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க முடியும். இந்த இரண்டு பாத்திரங்களையும் கமல் நெருங்கவே முடியாது. திரையில் அவருக்கான இடம் அவருக்கானது மட்டுமே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் என ட்வீட் செய்திருந்தார்.

Scroll to load tweet…

"அண்ணாமலை", "முள்ளும் மலரும்" படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கதாபாத்திரத்தை தான், கமல் ஹாசனால் நெருங்க முடியாது என குறிப்பிட்டிருந்தார் நவீன். அதனைப் பார்த்த தீவிர கமல் ரசிகர்கள் நவீன் மீது கடும் கோபத்தில் உள்ளனர். 

Scroll to load tweet…

இதனால் கொந்தளித்துப் போன கமல் ரசிகர்கள் டுவிட்டரில் நவீனை வறுத்தெடுத்து வருகின்றனர். அந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் ரஜினி நன்றாக தான் நடித்திருக்கிறார், ஆனால் நெருங்க முடியாது என்ற வார்த்தைக்கு தான் கமல் அகராதியில் இடம் இல்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். 

Scroll to load tweet…

பலர் 70களில் கமல் ஹாசன் நடித்த மலையாள படங்களின் கிளைமேக்ஸ் காட்சிகளைப் போய் பாருங்கள் என நவீனுக்கு அறிவுரை செய்துள்ளனர். வாழ்த்து சொல்கிறேன் என்ற பெயரில் நெருங்க முடியாது என்ற ஒற்றை வார்த்தையை விட்டு, கமல் ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டிருக்கிறார் நவீன்.