கமல் ஹாசன் குடும்பத்தில் நடத்த விசேஷம் குறித்து சுஹானி பகிர்ந்த பேமிலி போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  

உலக நாயகன் கமல் ஹாசன் சட்டமன்ற தேர்தல் வேலைகளை எல்லாம் முடித்த கையோடு, சின்ன பிரேக்கிற்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிசியாகிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிக்கும் விக்ரம் பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கமல் ஹாசன் குடும்பத்தில் நடத்த விசேஷம் குறித்து சுஹானி பகிர்ந்த பேமிலி போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

சென்னை எல்டாம்ஸ் சாலையில் இருக்கும் பழைய வீட்டை புதுப்பித்துள்ளனர். இந்த வீடு கமல், சுஹாசினி உள்ளிட்டோர் வளர்ந்த வீடு ஆகும். எனவே அதன் புதுப்பிக்கும் பணிகள் முடிந்ததை கமலின் மொத்த குடும்பமும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். இந்நிகழ்ச்சியில் கமலின் அண்ணன் சாருஹாசன், அண்ணி கோமளம், சுஹாசினி மணிரத்னம், அவருடைய தங்கையான அனு ஹாசன், கமலின் மகள் அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நம்மவருடன் ஒட்டுமொத்த குடும்பமுஇம் மகிழ்ச்சியாக இருக்கும் போட்டோவை சுஹாசினி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

View post on Instagram

இந்த புகைப்படத்தில் கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் மட்டும் மிஸ்ஸிங். இதை ரசிகர்கள் நோட் செய்யாமல் இல்லை, ஸ்ருதி எங்கே என கேள்வி எழுப்பியும் உள்ளனர். மும்பையில் இருக்கும் ஸ்ருதி ஹாசன் வீட்டில் அனைவரும் ஒன்றிணையும் நிகழ்ச்சியில் ஸ்ருதி இல்லாதது அவருடைய ரசிகர்களை சற்றே அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது.