பிக்பாஸ் நிகழ்ச்சி, பல்வேறு பிரச்சனைகள், வாக்கு வாதங்கள், எதிர்பாராத உறவுகள், கோவம், பாசம் என... அனைத்தும் கலந்த கலவையாக விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதே போல் டாஸ்குகளும் சூடு பிடித்து வருகிறது.

கடந்த வாரம், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்ல இருந்த ஆஜித் தன்னுடைய எவிக்ஷன் ஃப்ரீ பாசை வைத்து தம்பித்து விட்டார். ஆனால் இந்த வாரம் கண்டிப்பாக ஒரு போட்டியாளர் வெளியே செல்வது உறுதி. அதிலும் இந்த முறை, அதிகபட்சமாக 11 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளதால் யார் வெளியேறுவார் என்கிற குழப்பம் மக்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், கமல்ஹாசன் எலிமினேஷன் கார்டுடன் என்ட்ரி கொடுக்கிறார். ஆஜித்தை பார்த்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என கேட்ட பின், எச்சிமுழுங்கி கொண்டிருக்கும் வேல்முருகனிடம் கேட்க அவர், இந்த வாரம் தான் தான் வெளியேறுவேன் என கூறுகிறார். இதற்க்கு கன்ஃபாம்மா என கேட்டு சிரிப்பது போன்றும்... அணைத்து போட்டியாளர்களும் சேர்ந்து ஒருவரை வெளியே அனுப்புவது போன்றும் இந்த புரோமோ வெளியாகியுள்ளது.

தற்போதைய தகவலின் படி இன்றைய தினம் மிகவும் குறைவான வாக்குகள் பெற்று பிரபல கிராமிய பாடகர் வேல்முருகன் வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. இவர் மிகவும் சுவாரஸ்யமான கன்டென்ட் கொடுக்காமல், எந்த ஒரு விஷயத்திற்கும் பம்மிக்கொண்டே இருப்பதால் இவருக்கு மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.