Kamal did not pay salary to gowthamy
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன், அவரது படங்களில் பணியாற்றியதற்கான சம்பளத்தை தனக்கு இன்றும் செட்டில் பண்ணவில்லை என நடிகை கௌதமி குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் கமலஹாசன் தனது இரண்டாவது மனைவி சரிகாவை விவாகரத்து செய்த பின் நடிகை கௌதமியுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். பல ஆண்டுகளாக ஒன்றாக இருந்த இவர்களுக்குள் சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நானும் கமலும் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிந்தோம். தசாவதாரம், விஸ்வரூபம் உள்ளிட்ட அவரது முந்தைய படங்களில் பணியாற்றியதற்கான சம்பள பாக்கியை அவர் இன்னும் வழங்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

அந்த சம்பள பாக்கிதான் என் வாழ்க்கையைக் கட்டமைக்க எனக்கு இருக்கும் ஒரே பொருளாதார வாய்ப்பு என்றும், கமல் மற்றும் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து பணத்தைப் பெற பலமுறை முயற்சிகளை மேற்கொண்டதாகவும் கௌதமி அதில் தெரிவித்துள்ளார்.
