உலக நாயகன் கமல்ஹாசனின் நற்பணி மன்றத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் இன்று காலை மரணம் அடைந்தார்.
மத்திய சென்னையை சேர்ந்த ரமேஷின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கமல் தனது டுவிட்டரில், "நம் நற்பணி இயக்கச்செடியின் நறுமலர் ஒன்று இன்று காலை உதிர்ந்தது. மத்திய சென்னை திரு.ரமேஷ் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று கூறியுள்ளார்.
ரமேஷின் மறைவு கமல்ஹாசனை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
