kamal birthday dress issue

பிரபல நடிகை கஸ்தூரி, நல்லது... கெட்டது... என எதுவாக இருந்தாலும் தன்னுடைய மனதில் பட்ட கருத்தை வெளியே சொல்லி விடுவார்.

அதே போல பலருக்கும் மனதில் வைத்திருந்த ஒரு விஷயம் குறித்து, நேரடியாக சமூக வலைதளத்தில் கூறியுள்ளார் கஸ்தூரி. 

நேற்றைய தினம் நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் அனைவரும் எதிர்பார்த்ததை விட மிக பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. காலையில் மருத்துவ முகாமில், மக்களை சந்தித்துப் பேசிய கமலஹாசன், பின்னர் 12 மணி போல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையும் போடாமல், அவருக்கு பிடித்த கருப்பு உடையும் அணியாமல் பதான்சூட் அணிந்து வந்தார்.

இதனை சுட்டிக்காட்டி நடிகை கஸ்தூரி இவருடைய ட்விட்டர் பக்கத்தில் 'டெல்லிதான் குறியோ என தன்னுடைய சந்தேகத்தைப் போட்டுடைத்தார்.

மேலும் "ஆண்டவர் என்ற செல்லப்பெயருக்குத் தகுந்தாற் போல் அமைந்தது பிறந்தநாள் படலம். திரளாக திரையுலகினர் ; திருப்பதி போல வரிசையில் வாழ்த்தினோம்! எடுத்துச் சென்றேன் வெறுங்கை! கொடுத்து வந்தேன் நம்பிக்கை" என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…
Scroll to load tweet…