kamal became advertisement Ambassador for sachin kabadi team

புரோ கபடி லீக்கில் சச்சின் அணியான தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதராக கமல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டியைப் போன்று புரோ கபடி லீக் போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 5-வது புரோ கபடி லீக் வரும் 28-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம், அரியானா, குஜராத் உள்பட மொத்தம் 12 அணிகள் இந்த புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்க உள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தின் சென்னை கபடி அணியின் பங்குகளை வாங்கி சச்சின் சக உரிமையாளர் ஆனார். அந்த அணிக்கு “தமிழ் தலைவாஸ் அணி” என்று பெயரிடப்பட்டுள்ளது.

புரோ கபடி தொடரில் இடம்பெற்றுள்ள சச்சினின் தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதராக நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

“முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்த கமல் “கோட்டைத் தாண்டி புகழைச் சூடுங்கள்” என்று வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.