பிக்பாஸ் சீசன் 2-ல் இன்று முதல் முறையாக அகம் டிவி வழியாக போட்டியாளர்களை சந்தித்து பேச உள்ளார் தொகுப்பாளர் கமல். 

போட்டியாளர்கள் செய்த, சிறு சிறு குற்றங்களையும் நோட்டமிட்டு... இவர் கேள்வி மேல் கேள்விகள் கேட்க உள்ளதால் இன்றைய நிகழ்ச்சியின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

 

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகவும், எதார்த்தமாக சிரித்துக் கொண்டே ரசிகர்களை கவர்ந்துள்ளவர் காமெடி நடிகர் சென்ராயன். மேலும் இவர் தன் மீது யாராவது கோவம் கொண்டாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், கமல் சென்ராயனை குறி வைத்து வம்புக்கு இழுத்துள்ளார். அதில் 'நாம் அடுத்ததாக பேச உள்ள மனிதர் உயர்திரு சென்ராயன் என்றும், நீங்கள் ஏன் அடிக்கடி சில விதிமுறைகளை மீறுகிறீர்கள் என்று ஆங்கிலத்தில் கேட்கிறார்.

 

இதை கேட்டதுமே மிரண்டு விட்டார் சென்ராயன், பின் தான் பேசியது ஏதாவது புரிகிறதா என கேட்கிறார். அதற்கு சென்ராயன் ஒரு வித கலக்கத்தோடு இல்லை என பதில் கூற... நடிகர் கமல் நாங்க பேசும் ஆங்கிலம் உங்களுக்கு புரியவில்லை, நீங்கள் பேசும் ஆங்கிலம் எப்படி எங்களுக்கு புரியும் என சிரித்துக்கொண்டே கூறுகிறார். கமல் இதை கூறியதும் அரங்கமே சிரிப்பில் மூழ்குகிறது என்பது போல் இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.