விஜய் டிவியில் ஒலிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு  நாடுகளில் இருந்து ரசிகர்கள் அதிகமாக பார்த்து வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சென்ற ஆண்டு இருந்த ஒரு சுவாரஸ்யம்  இந்த ஆண்டு இல்லை என்றே கூறும் அளவிற்கு தான் உள்ளது

ஆனால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டுக்கான சீசன்  2 வில்,   கலந்துக்கொண்டுள்ள பெண்கள் கொஞ்சம் ஆபாசமாக நடத்துக் கொள்வதாக நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

பிக்பாஸ் சீசன்  2 நிகழ்ச்சியில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, பெண்கள்  படுக்கை அறையில் மகத் படுத்துக்கொண்டு சத்தமாக பேசியதற்கு பொன்னம்பலம் ஆட்சபேனை தெரிவித்து இருந்தார்

மேலும், பிக்பாஸ் வீட்டில் மகத் யாஷிகா, ஷாரிக் ஐஸ்வர்யா செய்யும் சில விஷயங்கள் சரியாக இல்லை என்று அவர் பொன்னம்பலம்  தெரிவித்து இருந்தார்

மேலும், இந்த நிகழ்ச்சியில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக அமர்ந்து பார்க்கின்றனர்..தமிழ் பாரம்பரியம் பண்பாடும் காக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார்.

இதற்கு கமல், நான் பேச நினைத்ததை நீங்கள் கூறி விட்டீர்கள் என  தெரிவித்து இருந்தார்.

மேலும், பொன்னம்பலம் மற்றும் ஆனந்த் இருவருக்கும் இந்த வீட்டின் மீது  அக்கறை உள்ளது... பொன்னம்பலம் ஒரு அப்பாவாக கண்டித்தார்.. ஆனந்த் ஒரு தாத்தாவாக இருந்து செல்லம் கொடுத்தார் என கமல் தெரிவித்து இருந்தார்...

"நீங்கள் யாரும் மக்கள் மனதில் இடம் பிடிக்க வில்லை....உங்களுக்கு தரப்பட்டிருக்கும் இந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.... இதனை ஒரு அறிவுரையாகவோ அல்லது டிப்ஸ் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.. என்னை ஆரம்பத்தில் யாரும் கண்டுக் கொள்ளவில்லை..ஆனால் நான் பாலச்சந்தர் கண்களில் படும்படியான  சில காரியங்களை செய்தேன்...புகழ் பெற்றேன்..எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்... தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள் அறிவுரை வழங்கினார் கமல்

ஆணுக்கு சமமாக பெண்கள் வர வேண்டும் என நினைத்து அவர்கள் செய்யும் தவறுகளை எல்லாம் நீங்களும் செய்ய கூடாது என அவர் தெரிவித்து இருந்தார் கமல்