'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி, இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' என்ற வெற்றி படத்தை இயக்கியதோடு தற்போது 'தளபதி 61' படத்தையும் விஜயை வைத்தே  இயக்கி வருகிறார். 

இந்த நிலையில் அட்லி, 'சங்கிலி புங்கிலி கதவ தொற' என்ற படத்தை தயாரித்து வருகிறார் என்பதை ஏற்கனவே நமது தளத்திலேயே கூறி இருந்தோம். 

ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா, ராதாரவி, தம்பி ரமையா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சத்யன் இயக்கி வருகிறார். சூரியன் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் மே மாதம் 19ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அட்லீ தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில் சற்று முன்னர் அட்லி, இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏப்ரல் 24ஆம் தேதி அதாவது நாளை சென்னை சத்யம் திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

இந்த படத்தின் பாடல்களை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே நாளில் இந்த படத்தின் டிரைலரும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.