விண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

அறிமுக இயக்குனர் பிரியா மிஷ்ரா இயக்க, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கல்பனா சாவ்லா வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்துக்காக கடந்த ஏழு வருடங்களாக பல விஷயங்களை தயார் செய்து வந்திருக்கிறாராம் இயக்குனர்.

மேலும் கல்பனா சாவ்லா குடும்பத்தினரிடம் பழகி, அவரது குணம், அவருக்கு பிடித்த விஷயங்கள், உணவுகள் அவர் வாழ்க்கையில் சந்தித்த துக்கம் சந்தோஷம் என பல்வேறு தகவல்களை சேகரித்து வைத்துள்ளாராம் இயக்குனர்.

இதனால் விரைவில் படத்தை பற்றி மற்ற விஷயங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் பிரியங்கா சோப்ரா குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.