விமல் - ஓவியா நடித்த ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாம்.

‘களவாணி’ என்ற படத்தை ஏழு வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சற்குணம் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் ‘பசங்க’ படத்தில் அறிமுகமான விமலை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர்.

இந்தப் படத்தின் மூலம்தான் நடிகை ஓவியா நாயகியாக அறிமுகமானார்.

முதன் முறையாக தஞ்சை பகுதி மண்வாசனை கதையாக வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இப்படத்தில் விமலுடன் ஓவியா, சூரி, சரண்யா, இளரவசு, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்திற்கு எஸ்.எஸ்.குமரன் இசையமைத்திருந்தார்,

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறதாம்.

விமலுடன் சூரி, கஞ்சா கருப்பும் மீண்டும் நடிக்கிறார்கள். படத்தை இயக்குனர் சற்குணம் இயக்குகிறார்.

இந்த தகவலை விமல் தனது பிறந்த நாளில் வெளியிட்டார்.

தற்போது விமல் ‘மன்னர் வகையறா’ என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்து வருகிறார். இதனை பூபதி பாண்டியன் இயக்குகிறார். இது விரைவில் வெளிவர இருக்கிறது என்பது கொசுறு தகவல்.