Kala Teaser released by dhanush
நடிகர் ரஜினிநாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தின் டீஸர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது. இது வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

இப்படத்தை அடுத்த ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியிடும் என்று தனுஷ் அறிவித்திருந்தார்.

ஆனால், சங்கராச்சாரியார் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘காலா’ டீசர் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தனுஷ் தெரிவித்தார். இதனால் மார்ச் 2ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.

ஆனால் நள்ளிரவு 12 மணியளவில் காலா டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டார். அந்த டீசரில் ‘இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!!’ என்னும் வசனம் இடம்பெற்றிருந்தது.
ரஜினிகாந்த் நெல்லைத் தமிழில் பேசியுள்ள காலா பட டீஸர் வெளியிடப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.
