சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் 'காலா'. தமிழ் மொழி மட்டும் இன்றி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. 

உலகம் முழுவதும் 2,929 திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் தமிழ் நாட்டில் 720 தியேட்டரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மும்பை, தாராவி பகுதியைப் போலவே, சென்னையில் மிகவும் பிரமாண்ட செட் அமைத்து இந்த படத்தை இயக்கினார் பா.ரஞ்சித். மேலும் பாலிவுட் நடிகை ஹீமோகுரோஷி, நடிகை ஈஸ்வரி ராவ், மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில் 1000-க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் நடித்திருந்தனர்.

படத்தின் செலவுகள் மட்டும் 140 கோடியை தாண்டியதாக கூறப்பட்டது. அதற்கு ஏற்றப்போல் படம் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்ற போதிலும், 'காலா' படத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாக ஒருதகவல் வெளியானது. 

இதனால் வினியோகஸ்தர்களுக்கு படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் ரூ.40 கோடி திருப்பி தர சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து படக்குழுவினர் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 

'இதுகுறித்து நடிகர் தனுஷ் கூறியுள்ளது, 'காலா' படத்தின் வசூல் குறித்து பொய்யான தகவல்கள் பரவி வருகிறது. 'காலா' உண்மையாகவே வெற்றி படம். எங்கள் வொண்டர்பார் பிலிம்ஸ்க்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. இந்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கும், படத்திற்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இதன் மூலம் 'காலா' திரைப்படம் நஷ்டமடைய வில்லை என்கிற தகவல் உறுதி படுத்தப்பட்டுள்ளது.