kajol open talk with pair

'மின்சார கனவு' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் கொடுத்தவர் பாலிவுட் முன்னணி நடிகை கஜோல். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தாலும், இவர் எதிர்பார்த்ததுபோல் கதை அமையாததால் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது 20 வருடம் கழித்து தனுஷ் நடித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ,VIP 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில் இவரிடம் பிரபல பத்திரிக்கை ஒன்று நீங்கள் ஏன் ஜூனியர் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு கஜோல் சிரித்துக்கொண்டே... கதைக்கு தேவை என்றால் நடிக்கலாம். இப்போது படங்களில் வெவ்வேறு விதமான கதைகள் வந்துகொண்டிருக்கிறது.

இயக்குனர்கள் அனுபவத்துடனும், பொறுப்புடனும் படங்களை சிறப்பாக எடுக்கிறார்கள். இது நல்லது. ஆனால் என்னுடன் ஜோடியாக நடிக்க கூடியவர் கொஞ்சம் முதிர்ச்சியுடன் மேன்லியாக இருக்க வேண்டும் என நான் எதிர்பாக்கிறேன் இளமையாக இருக்க கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

ஆனால் பாலிவுட்டை சேர்ந்த கரீனா கபூர், மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்ற நடிகைகள் தங்களைவிட இளைய வயது நடிகர்களுடன் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.