பிரபல பாலிவுட் நடிகை கஜோல் 1997ஆம் ஆண்டு இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்சார கனவு படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் நடிக அவருக்கு வாய்ப்புகள் வந்தாலும் அவர் எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. 

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. 

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா இயக்குகிறார். இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க பிரபல நடிகைகளிடம் சௌந்தர்யா பேச்சு வார்த்தை நடத்தி வந்தார், தற்போது அதில் கஜோல் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இதில் இவர் வில்லியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.