ஆபாச காட்சிகளை படமெடுத்து சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் படங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் காஜல் அகர்வாலின் மார்பை மற்றொரு பெண் அழுத்தும் காட்சி வெளியாகி அதிர வைத்தது. அதற்கு தற்போது விளக்கமளித்துள்ளார் அப்படத்தின் இயக்குநர்.

 

காஜல் அகர்வால் நடித்துள்ள படம் பாரிஸ் பாரிஸ். ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப்படம் இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளிவந்து ஹிட்டான குயின் படத்தின் ரீமேக். இந்தப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. காஜல் மார்பை பிடித்து ஒரு பெண் அழுத்தும் காட்சி டீசரில் இடம்பெற்றது. இந்த காட்சிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் விளக்கம் அளித்துள்ளார். "டீசரை தனியாக பார்க்கும் போது தான் அப்படித் தெரியும். அந்த காட்சியின் முன், பின் காட்சிகளை சேர்த்து பார்க்கும் போது அதற்கான காரணம் புரியும். ஹிந்தி படத்திலும் இந்த காட்சி இருக்கிறது" என அவர் விளக்கியுள்ளார்.