பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதுவும் நிலை இல்லை என்கிற சூழல் தான் உள்ளது. நேற்றைய தினம் நாமினேஷன் செய்யப்படுவதில் இருந்து தப்பித்த, ஆரவ் இன்று  திடீரென  நாமினேஷன் செய்யப்படுவது போல் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த நாமினேஷனில் இருந்து அவர் விடு பட ஒரு வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. அதற்கு அவர் மூன்று போட்டியாளர்களை தேர்தெடுக்க வேண்டும் என்று பிக் பாஸ் தரப்பில் இருந்து கூறியவுடன். ஆரவ் பிந்து, சுஜா, மற்றும் காஜல் ஆகிய மூன்று பெயரையும் தேர்தெடுக்கிறார்.

நீச்சல் குளத்தில் மூன்று நிற பந்துகள் போடப்பட்டிருந்து, அதில் இந்த மூன்று பேரும் தங்களுக்கான நிற பந்துகளை நீச்சல் குளத்தில் மூழ்கி எடுத்து கரையில் உள்ள அவரவருக்கான பெட்டிகளில் நிரப்ப வேண்டும் என்பது தான் டாஸ்க்.

இந்த டாஸ்கை மூன்று பெண் போட்டியாளர்களும் செய்துகொண்டு இருக்கும்போது,திடீரென  காஜல் கால் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்குகிறார் உடனே வெளியில் உள்ள போட்டியாளர்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவது போல் உள்ளது. காஜலுக்கு என்ன நேர்ந்தது என்பது  இன்றைய நிகழ்ச்சியில்   தான் தெரியவரும். அது வரை காத்திருப்போம்.