சினேகனுக்கு ஜோடியானார் ஓவியா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உச்சத்துக்கு போனவர்கள் சிலர் ஒரு சிலர் வியர்சன உச்சத்துக்கு போனவர்கள் அந்த வகையில் கட்டிபிடி வைத்தியம் மூலம் பிரபலமானவர் என்றால் அது நம்ம சினேகன் என்று தான் சொல்லணும் இப்போது அவருக்கு அடித்து இருக்கு மிக பெரிய ஜாக் பாட் என்ன தெரியுமா ஓவியாவுக்கு ஜோடி போடபோகிறார்.

சினேகன் நடிக்கும் ‘பனங்காட்டு நரி’ படத்தில், அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.

சினேகன் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘பனங்காட்டு நரி’. ‘யமுனா’ படத்தை இயக்கிய கணேஷ் பாபு இந்தப் படத்தை இயக்குகிறார். ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில், சினேகனுக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒன்லைன் கேட்டு ஓகே சொல்லிவிட்ட ஓவியா, முழுக்கதையையும் கேட்டிருக்கிறாராம்.

மலேசியாவில் கடந்த பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் ஓவியா தான் வெளியிட்டார்.

காஜலை இம்ப்ரஸ் பண்ண சத்குரு ஜக்கி வாசுதேவ்!

சத்குரு ஜக்கி வாசுதேவ் தனக்கு ஸ்பெஷல் பரிசு அளித்துள்ளதை பார்த்து காஜல் அகர்வால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து நதிகளை இணைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி ஈஷா யோகா மைய நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ் நதிகளை மீட்போம் என்ற பேரணியை நடத்தினார். இதற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த பேரணியில் பங்கேற்ற நடிகை காஜல்க்கு நன்றி தெரிவித்து பரிசு அளித்துள்ளார் சத்குரு. இது குறித்து காஜல் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “பரிசுக்கு நன்றி. இதை பொக்கிஷமாக பாதுகாப்பேன்” என்று தெரிவித்து அந்த பரிசை புகைப்படம் எடுத்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.