* ’முதிர் கன்னன்’ ஆகிக் கொண்டிருந்த விஷால், ஒருவழியாக தனது மணமகள் யார்!? என்பதை உடைத்துவிட்டார். அது எல்லோரும் எதிர்பார்த்த ‘வரலெட்சுமி சரத்குமார்’ இல்லை என்பதால் பலருக்கு ஷாக். வருவுக்கு இது மிக மிகப்பெரிய ஷாக்காக இருக்குமே! என்று பலர் நினைத்தனர். ஆனால் அவரோ ‘டேய் வாழ்த்துக்கள்டா. ஒருவழியா இப்பவாச்சும் தாலிக்கு சம்மதிச்சியே! ஓவரா லவ் பண்ணி ஒழிஞ்சு போ!’ என்று செம்ம ஜாலியாக தனது மாஜி பாய்ஃப்ரெண்டை வாழ்த்தி தொலைத்துவிட்டாராம். 

* ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க முழு ஈடுபாடுடன் ரெடியாகிவிட்டார் ரஜினி. அதேவேளையில், அஜித்திடம் தான் தோற்றுவிட்டதாக கிளப்பப்படும் விமர்சனம் அவரது மனதை ரொம்பவே பாதித்துவிட்டது. இது அப்படியே முருகதாஸின் கவனத்துக்கு பாஸ் ஆக, அவர் நேரில் வந்து ‘விடுங்க சார்! அதைவிட ஆயிரம் மடங்கு மிரட்டல் மாஸாக நம்ம படத்தை கொண்டு வர்லாம்!’ என்று உறுதி கொடுத்து தெம்பாக்கிவிட்டாராம் தலைவனை. 
இந்தப் படத்தில் ரஜினியின் ஜோடி கீர்த்தி சுரேஷ்! என்று சொன்னவர்களுக்கு சூப் கொடுத்துவிட்டார் ஏ.ஆர்.எம்.

* ’பாரீஸ் பாரீஸ்’ படத்தில், ஒரிஜினல் வெர்ஷனில் இருந்தது போலவே, சக பெண்ணால் ‘மார்பு அமுக்கப்படும்’ காட்சியில் நடிக்க சம்மதித்து தெறிக்கவிட்டிருந்தார் காஜல் அகர்வால். இம்பூட்டு துணிந்துவிட்ட பொண்ணு, நிச்சயமா ‘இந்தியன் 2’வில், காதல் இளவரசனோடு எந்த எல்லையையும் தாண்டி நடிப்பார்! என்று கோடம்பாக்கமே முணுமுணுக்கிறது. 

* அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் வரும் 21-ம் தேதி சென்னை பின்னி மில்ஸில் துவங்குகிறது. இதற்காக செம்ம பணத்தை அள்ளிக் கொட்டி, வட சென்னை ஏரியாவை செட்டாக போட்டிருக்கிறார்களாம். தளபதி இதுல வடசென்னை பாஸையில் புகுந்துவிளையாடுவார்! என எதிர்பார்ப்பு.

* போனிகபூர் தயாரிக்க,     விநோத் இயக்க இருக்கும் ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் தல- அஜித்தை செம்ம ஸ்டைலியாக காட்டும் முடிவில் இருக்கிறார்கள். ஓவர் மெனெக்கெடலுக்குப் பிறகு தன்னை மாற்றிக் கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறாராம் அஜித். அவரது லுக் இந்தப் படத்தில் தெறிக்கவிடும் என்கிறார்கள்.