தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வரும் காஜல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை விட முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களை தான் தேர்வு செய்து அதிகமாக நடித்துள்ளார். 

காஜல் ஸ்பெஷல்:

காஜல் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக கவர்சிக்கு குறைவு இருக்காது. நடிப்பதை விட இவர் டூயட் பாடுவதற்காக தான் அதிகமான சம்பளம் கேட்டு வாங்குகிறாராம். 

பட வாய்ப்பை மறுத்த காஜல்:

இந்நிலையில் தெலுங்கில் ரவிதேஜா நடிக்கும் 'அமர் அக்பர் ஆண்டனி' படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் காஜல். ஆனால் அவர் கேட்ட சம்பளம் தரப்படவில்லை என்பதால் பின்னர் அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அதனால் இப்போது காஜல் அகர்வால் வேடத்துக்கு அனு இம்மானுவேல் கம்மிட்டாகியுள்ளார். 

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் கதைக்கும், தன்னுடைய கதாப்பாத்திரதிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருந்தால் சம்பளத்தை விட்டுக் கொடுக்கலாம். ஆனால் இது போன்ற மசாலா படங்களுக்கு சம்பளத்தை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கறாராக கூறுகிறாராம் காஜல்.