பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 30 ஆம் தேதி அன்று, மீண்டும் பாரத பிரதமராக பதவி ஏற்றார். டெல்லியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற விழாவில், பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த வகையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் ஏன் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என முதல் முறையாக காஜல் அகர்வால் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மோடி அவர்களின் பதவி ஏற்பு விழாவிற்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறேன். ஆனால் அழைப்பிதழ் மிகவும் தாமதமாக எனக்கு கிடைத்ததால், கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது என கூறியுள்ளார். மேலும் இரண்டாவதாக பாரத பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடியின் பணி சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.